தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
Spread the love

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் ,தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்திருப்பினும், ஒருசில தோட்டக் கம்பனிகள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென அரசுக்கு

முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் சமகால வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பீடு செய்தல்.
  • அவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் சம்பளத்தைச் செலுத்துவது தொடர்பாக ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளிடம் காணப்படுகின்ற இயலுமைகளை பரிசீலிப்பதற்குக் குழுவொன்றை நியமித்தல்
  • அத்துடன், ஏதேனுமொரு தோட்டக் கம்பனி முறைகேடான முகாமைத்துவத்தால் சம்பளம் செலுத்துவதற்கு தவறினால், அவ்வாறான தோட்டக் கம்பனிகளுடனான காணிக் குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளல்.
  • வீடியோ