தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்
Spread the love

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உழவர் திருநாளான தமிழ் தைத்திருநாளினை இன்று (15) கொண்டாடி வருகின்றனர்.

இந்த திருநாளினையொட்டி நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மலையகத்தில் உள்ள ஆலயங்களிலும் தைத்திருநாளினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ

மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று சூரிய உதயமான 6.34 இற்கு அடுப்பு மூட்டி சூரிய பொங்கல் வைத்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து எல்லாம் வல்ல விநாயகர் பெருமானுக்கு மேள தாள இசை முழங்க,விசேட பூஜைகள் இடம்பெற்று வசந்த மண்டபபூஜை மற்று அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றன.

தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள்

ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்து மக்களின் தலையாய கடமைகளில் ஒன்றான நன்றி மறவாமை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் தைப்பொங்கல் தொன்று பாரம்பரியமாக கடைபிடித்து வரும் ஒன்றாகும். மனிதனின் வாழ்வாதாரத்திற்கும்

விவசாயத்திற்கும் உதவிய சூரிய பகவான் முதல் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பது இந்த தைப்பொங்களின் அடிப்படை தத்துவமாவதுடன்

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் இன்று மலையகம் எங்கும் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வீடியோ