தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

Spread the love

தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா

நமது மண்ணில் தென்னை ஆறு மாத காலத்தில் காய்க்குமா என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த பதிவு பதில் தருகிறது

பல்லாண்டு பயிர்கள் அவை தமது கால எல்லை எட்டும் பொழுதே காய்க்கும் அதில் அதற்கு நாம என்ன செய்ய வேண்டும்

நமது மக்கள் தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா ..?அப்படி காய்க்க வைக்க நாம் என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்

தென்னை ஆறு மாதத்தில் காய்க்குமா அல்லது இரண்டு வருடத்தில் காய்க்கும்
நிலை ஏற்படுமா என்றால் அது சாத்தியமாகாது

தென்னை விரைவாக காய்க்க என்ன செய்ய வேண்டும் ..?

ஆனால் தென்னை மரங்கள் அதன் இனங்களுக்கு ஏற்ப தமது வளர்ச்சி தருகின்றன ,
பிள்ளை போல தென்னை என்பார்கள் ,பிள்ளைகளை நாம் எவ்வாறு பராமரிக்கிறோமோ அவ்விதமே இதனையும் வளர்த்தால் நாம் அதே கால பகுதியில் பயனை பெற்று விட முடியும்

தென்னை பயிரிட முன் என்ன செய்ய வேண்டும் ..?

தென்னை பயிரிட முன் அதன் மண்ணை வளப்படுத்தி ஐந்தாண்டுக்கு தேவையான நிலத்தடி உரத்தை மண்ணுக்குள் புதைத்தால், பசிந்தாட் பசலை போல பதப்படுத்தி இடுகை செய்தால் மரம் அதிக வளர்ச்சியை பெற்று தரும்

அத்துடன் தென்னை மரத்தின் குழி பகுதியில் காய்ந்த புட்கள் அல்லது தென்னம் தும்புகளை இடுவதால் நீரின் ஈர பதத்தை வைத்து கொள்ளும் தென்னை மரம் பெருத்து வளர இது ஒரு காரணியாக அமையும்

நீர் பாசன வசதிகள் இல்லாதவர்கள் கூட இதன் மூலமான பராமரிப்பு பயனை ஏற்படுத்தும்

தென்னை மூன்று வருடத்தில் காய்க்குமா..?

தென்னை , மூன்று வருடத்தில் காய்க்குமா ஆம் ,தென்னை மரங்கள் உரிய முறைகள் மண் பராமரிப்பு செய்ய பட்டு அதன் வளர்ச்சிக்கு ஏற்ப நாம்

பசலை,நீர் மற்றும் மண் வளமாக்கும் செயல் திட்டங்களை முன்னக்கி செயல்படுத்தினால் தென்னை மூன்று வருடத்தில் காய்க்கும் நிலையை எட்டும்

அதற்கு தேவை தென்னை கன்றுகளுக்கு உரிய விடயங்கள் மேற்கொள்ளாது போனால் தென்னை கன்றுகள் ஐந்து வருடத்தில் காய்க்கும் நிலைக்கு சென்று விடும்

விரைவாக தென்னை வளர என்ன செய்ய வேண்டும் ..?

தென்னை மரத்தின் வேர்கள் அதிகம் இடம்பெறுகின்ற பொழுதே மரத்தின் வளர்ச்சி அதிமுகமாக இருக்கும்

தென்னை மரத்தின் வேரக்ள அதிகம் உருவாக இவை முக்கிய காரணியாக அமையும் ,வேர்கள் அதிக வளர்ச்சி கண்டாலே மரம் செழித்து வளரும் ,மரம் செழித்தாலே எமக்கு தேங்காய் கிடைக்கும் ,அதனால் வீட்டு வருமானம் பெருகும்

நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிக இலாபத்தை மேற்கொள்ளவும் தென்னைக்குள் ஊடு பயிர் செய்வது சாலை சிறந்தது ,

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தென்னையில் பயன் பெற்றிட முன்பு இரண்டு வருடத்திற்குள் நாம் அதிக இலாபத்தை ஊடு பயிர்கள் மூலம் பெற்று கொள்ள முடியும்

தென்னை அதிக இலாபம் தரும் தோட்டமுறை பயிர் ,மனம் சோர்ந்து போகாது தென்னை வளர்த்தல் ,பணத்தை அள்ள முடியும் .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply