தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

Spread the love

தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில்; தீ விபத்துக்குள்ளான கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும்

இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை அண்டிய பகுதியில் தீ விபத்துக்குள்ளான கப்பல் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த தீ விபத்து மூலம் சுற்றாடலுக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலுக்கு

கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்படுத்த பட்டிருப்பதாக கடற்படைத்

தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    Leave a Reply