தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

Spread the love

தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி

தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி
ரஜினிகாந்த்
சென்னை:

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.

கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-

தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.

டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.

டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.

    Leave a Reply