தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை: முன்னாள் எம்.பி வினோ

Spread the love

தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை: முன்னாள் எம்.பி வினோ

வன்னியில் தேசியகட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் நிச்சயம் வெல்லபோவதில்லை. அது அவர்களிற்கும் நன்கு தெரியும்

என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம். அந்த இயக்கம் மக்களின் ஆதரவினால் இன்று வரை கட்டிகாக்கபட்டு வருகின்றது. நிச்சயமாக தமிழ் தேசிய

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது. தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தீர்வினை காணுவதற்கு அவர்களின்

வழிகாட்டியாக அது என்றும் இருக்கும். அதிலிருந்து சிலர் விலகி சென்றிருக்கிறார்கள். அது என்ன நோக்கத்திற்காக என்பது

அனைவருக்கும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக நிச்சயமாக அவர்கள் செல்லவில்லை. தேர்தல் ஆசனபங்கீட்டு

பிரச்சினையினாலேயே கயேந்திரகுமார் அன்று பிரிந்து சென்றிருந்தார்.

அதுபோல ஆனந்தசங்கரி ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகள் பல காரணங்களுக்காக பிரிந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால்

கூட்டமைப்பு தற்போதும் பலமான ஒரு சக்தியாக மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு வருகிறது.

நாம் தெற்கின் சக்திகளுக்கோ அல்லது சர்வதேசத்திற்கோ எமது பலத்தை நிரூபித்துகொண்டே இருக்க வேண்டும். அப்போது தான்

எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். எமது பலம் அற்று போனால்

பிரச்சினைகளை தீர்பதற்கு அவர்கள் முன்வரப்போவதில்லை. எனவே வரப்போகும் தேர்தலில் உங்களின் பலத்தை முழுமையாக

பயன்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். முன்னைய காலங்களிலும் மக்கள் எம்மோடு

பயணித்திருக்கின்றீர்கள். அது தொடரவேண்டும் என்பது தான் எமது அன்பான வேண்டுகோள்.

இந்த தேர்தலில் பல சுயேட்சைகுழுக்கள் தேசியகட்சிகள் உங்களின் வாக்கை கவருவதற்காக வருவார்கள். உதாரணமாக பிரபா

கணேசனுக்கும் வன்னி மாவட்டத்திற்கும் என்ன சம்மந்தம் அவர் கொழும்பிலே அரசியல் செய்தவர். அவர் இங்கு போட்டி இடுவதற்கு

தயாராகின்றார். அது போல முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான அணி இங்கு போட்டியிட இருக்கிறது. அவருக்கு ஒரு கட்சிதேவையில்லை. இங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டிய

அவசியம் அவருக்கு நிச்சயம் இல்லை. அவர்களை ஏன் நாங்கள் புறக்கணிக்ககூடாது. அவர்கள் கொள்கை இல்லாத நிலையிலேயே

பயணிக்கின்றார்கள். அதனாலேயே அவர்களிற்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் புதிய புதிய அணிகளை

உருவாக்குகின்றார்கள். அதுபோல சிங்கள கட்சிகள் தமிழ்வேட்பாளர்களை களம் இறக்குகின்றார்கள்.

தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை. அது அவர்களிற்கும் தெரியும். இதுவெல்லாம்

எமது வாக்குகளை சிதறடிப்பதற்காகவே. எனவே மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply