தமிழக மீனவர்கள் 54 பேர் சிங்களப் படையால் கைது

Spread the love

சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால், இவர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 05 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. அதிலிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் வைத்தே செய்யப்பட்டனர் என்றார்.

மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.


மேலும்இ முல்லைத்தீவு – சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த கடற்படை பேச்சாளர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றார்.

    Leave a Reply