டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சி

Spread the love

பைஷல் இஸ்மாயில் –

டெங்கு நுளம்பு பரவலைத் தடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்த்தின் விஷேட அறிவுருத்தல்களுக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக, கிழக்கு மாகாண சபை வளாகத்தில் (18) கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில்

இச்சிரமாதானப் பணிகள் இடம்பெற்றது. இதில் முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட

முதலமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இதில் ஈடுபட்டனர்.

இதன்போது முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

டெங்கு நோய்த் தொற்றற்ற ஒரு நாடாக எமது நாடு திகழ்வேண்டும் என்ற ஜனாதிபதின் சிநத்தனைக்கமைவாக, கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணம் முழுவதும் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு

வருகின்றன. டெங்கு நுளம்பின் உருவாக்கத்தையும், அதன் பெருக்கத்தையும் இல்லாது செய்வதாக இருந்தால் நாம் இருக்கின்ற இடங்களை நாளாந்தம் துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட டெங்கு நுளம்புப் பரவல் வீதம் குறைவாக இருக்கின்றது. இதை 100 வீதம் இல்லாமல் செய்வதே எமது ஆளுநரினதும்,

எங்களினதும் நோக்காக இருக்கின்றது. அதற்காக சுகாதாரத்துறை பாரிய பங்களிப்புக்களையும், விழிப்புணர்வு செயற்பாடுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.

உயிர்கொல்லி நோயாக இருக்கின்ற டெங்கு நோய் பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளை

இல்லாமல் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இதை பெற்றிகொள்ள முடியும் என்றார்.

    Leave a Reply