டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம்-மக்களுக்கு எச்சரிக்கை

கல்முனை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் தொடக்கம் இது வரை 217 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று தாக்கத்திலும் கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை

முன்னெடுப்பதற்காக சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கு நோய் வேகமாக பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்பு பரவுவதற்கு வசதியாக வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

    Leave a Reply