ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

Spread the love

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை – ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தற்போதைய ஜனாபதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி, ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்தநிலையில், டிரம்ப் மீது இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் ஆதாரமின்றி சுமத்திய குற்றச்சாட்டுகளை அடுத்து, அவரது

ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அது அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான கலவரங்களில் ஒன்றாக மாறியது.

அதைக் கண்டித்து, டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி தெரிவித்தது.

இந்த நிலையிலேயே, ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில்

கலந்துகொள்ளப்போவதில்லை என்று டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply