ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை

Spread the love

ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை

இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு

அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக

முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்

ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.


26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

    Leave a Reply