சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Spread the love

சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெல் அறுவடையில் 200,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு

செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு தேவையான 10,400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும்

சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக புதிய

அரசாங்கத்தினால் கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட 50 ரூபா

விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் இம்முறை சிறுபோகத்தில் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை

கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதிலும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

முன்னைய வருட சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

புதிய அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா உறுதி

செய்யப்பட்ட விலையின் கீழ் மொத்த அறுவடையையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

      Leave a Reply