சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி

Spread the love

சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி

கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர்.

செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி

குமாரசாமியும் ஒருவர். யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.

கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர்.

இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59

வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு டியூஷன் போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.

அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர்.

கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.

அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது.

இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை

முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது!

தீபச்செல்வன்.

    Leave a Reply