சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !

Spread the love

சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !


சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது. நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல்

உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,

இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்

களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்

மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள் முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள்

மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு. இதனை நோக்கிய

ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தின் முழுமை பின்வருமாறு :

சிங்கள பேரினவாதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசம், தனது தேசப்புதல்வர்களை நினைவேந்துவதில் சிறிலங்கா அரசின் பெரும் சவால்களை இவ் வருடம்

எதிர்கொண்டிருக்கிறது. தனது காவல்துறையினையும் நீதிமன்றங்களையும் பயன்படுத்தி மக்கள் தமது

வீரப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்குச் சிறிலங்கா அரசு தடைவிதித்திருக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்தினை இனவழிப்புக்குள்ளாக்கும் சிங்கள இனவாத அரசின் இச் செயல் வியப்புக்குரியதொன்றல்ல.

எதிர்பார்க்கப்டாததொன்றுமல்ல. ஆனால் இத் தடையினை ஒரு அரசியல் முடிவாகக் காட்டாது சட்டம் ஒழுங்கு விடயம் போல காட்டுவதற்கு சிறிலங்கா அரசு முற்பட்டுள்ளது. கொரோனா

உலகப்பெருந்தொற்றுச் சூழலையும் சிறிலங்கா அரசு இவ் விடயத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது.

தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமை. அவர்களது ஜனநாயக உரிமை. அடிப்படையானதொரு மனித உரிமை. உலகளாவிய மக்கள் தங்கள்

தேசங்களின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினைக் கொண்டிருப்பது போல தமிழீழ மக்கள் இந்த உரிமையினைத் தம்;வசம் கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்

தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு மாவீரர்களை நினைவுகூர்வதற்கு விதிக்கும் தடைகள் அப்பட்டமான ஜனநாயக மனிதவுரிமை மீறலாகும்.

ஈழத்தமிழர் தேசம் சிறிலங்கா இனவாத அரசின் இத் தடைகளை உடைப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இதனை ஒரு நீதிமன்ற விடயமாகச் சுருக்கிக் கொள்ளக்கூடாது. நீதிமன்றங்களை

அரசியல் நியாயங்களை வெளிப்படுத்துவற்கான களங்களாகப் பயன்படுத்துவது வேறு. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவற்கான அனுமதியினை நீதிமன்றங்களிடம் வாதாடி

வென்று விடலாம் என நம்புவது வேறு. சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது.

நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,

இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்

களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்.

சிங்கள அரச கட்டமைப்புக்கள் மாவீரர் நாளுக்கென விதித்த தடைகளுக்கு எதிராக ஒன்றுகூடிய தமிழர் தேசியகட்சிகள், மக்களை வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு விளக்கேற்றுங்கள் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். குறைந்தபட்சம் மக்களைத்

தத்தமது வீடுகளுக்குள் ஒதுங்கிக் கொள்ளாது வீட்டு வாசல்களிலும் மதில்களிலும் தீபங்களை ஏற்றுங்கள் என அறைகூவல் விடுத்து தமிழீழ தேசத்தைத் தீபங்களால் ஒளிரச் செய்திருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புக்குள்ளாகி நிற்கும் நமது மக்களை ஆக்கிரமிப்பாளர்களை மூர்க்கத்துடன் எதிர்க்கும் போர்க்குணம்

கொண்டவர்களாக மாற்றும் சக்தி மாவீரர்களது மூச்சுக்கு உண்டு என்பதனை நமது அரசியற் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள்

முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள் மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு.

இதனை நோக்கிய ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.

Leave a Reply