சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்

Spread the love

சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கின்றதா என சிங்கள தரப்பு கேள்வி கேட்பது என்பது இந்த பத்து ஆண்டுகள்

கழித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான அச்சத்தையே வெளிக்காட்டுவதாக அமைகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஊடக செவ்வியொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடனாக அவரது தொடர்பு குறித்து சமீபத்தில் துலவித்துலவி கேட்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் வார சிறப்பு அமர்வின் போதே, தனதுரையில் இந்த கருத்தினை வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

சிங்களத்தின் இந்த அச்சம் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டை அது அவதானித்து வருவதனையே வெளிப்படுத்தவதாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பொதுவெளியில் சர்சையினை ஏற்படுத்தியுள்ள அந்த செவ்வியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் உரையாட்ப்பட்ட விடயம் பின்வருமாறு அமைகின்றது :

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.

பதில் – புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

கேள்வி – ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.

பதி்ல் – அவருடன் தொடர்புகள் இல்லை.

கேள்வி – தொலைபேசி தொடர்புகள்

பதில் – ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை.

ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. புவுகு,டீவுகு,ஊவுஊ, யுவுஊ

ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.

கேள்வி – ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.

பதில் – நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு

கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.

கேள்வி – ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.

பதில் – தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.

இவ்வாறு அந்தச் செவ்வியின் ஒரு பகுதி அமைந்திருந்தது.

Leave a Reply