சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

Spread the love

சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.

நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு கிண்டியில் உள்ள டாக்டர்

ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

சர்க்கரை நோயை கண்டறிய டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்( Diabetes Risk Score) என்று முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும்

எளிமையானது. இந்த முறையில் இரத்த பரிசோதனை செய்யாமலேயே உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி

முதலாவது முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.

டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்

3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்

5வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.

நோயானது உடலில் பரவாது தடுத்திட உணவு பழக்கம் மற்றும் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கிய அகாரணமாக அமைகிறது

இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    Leave a Reply