அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா

Spread the love

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா

மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் ‘தெயட்ட எலிய’ மின்சார திட்டத்தை

முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கிரிபாவ வேரகல கிராமத்தில் ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக ஆரம்பித்து வைத்தார்.

‘தெயட்ட எலிய’ திட்டத்தின் ஊடாக மின்சாரம் இல்லாத அனைத்து சமுர்தி பெறுநர்களுக்கும் மற்றும் சமுர்தி உதவிக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.

மின்சார சபை இலவச மின்சார இணைப்பை வழங்கும். வீட்டிற்கு வயரிங் செய்வதற்காக சமூர்த்தி வங்கி சலுகை வட்டி கடன் வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் அடையாளம் காணப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, மின்சார சபையின் தலைவர் விஜித

ஹேரத் மற்றும் சமுர்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Home » Welcome to ethiri .com » அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் கோட்டா

Leave a Reply