கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’

Spread the love

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்பட்டாலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாதென,

தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூன்றில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தொழிற்சாலைகளில்

ஒரு கொரோனா தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்ட தொழிற்சாலை, இன்று மீள திறக்கப்படுமெனத் தெரிவித்த அவர்,

ஏனைய இரு தொழிற்சாலைகளும், இன்னும் சில தினங்களுக்குள் மீளத் திறக்கப்படுமெனத் தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள 87 தொழிற்சாலைகளில், 36 ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரிவதாகவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக, தற்போது வெறும் 8 ஆயிரம் ஊழியர்களே அங்கு வருகை தருவதாகவும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள்,

சேவைக்கு வரமுடியாமல் இருப்பதாகவும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply