கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு

Spread the love

கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 33 பேர் இனங்காணப்பட்டனர்.

நேற்று புதிதாக அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையைச்

    சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

    மற்ற இரண்டு நோயாளிகளும் கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளிகளும் 13 வயது பிள்ளை மற்றும் 70 வயது பெண் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

    இதற்கமைவாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக உயர்வடைந்துள்ளது.

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் 549 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

    இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    அதன்படி இதுவரையில் 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார். அதற்கமைய இலங்கையில் கொரோனா

    தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயிர்வடைந்துள்ளது.

    இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர்

    கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்தள்ளது.

    கொரோனா தொற்று
    கொரோனா தொற்று

        Leave a Reply