கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video

Spread the love

கொரனோ அவலம் -உணவுக்காக 4 கிலோ மீட்டர் காத்திருந்த மக்கள் – அதிர்ச்சி video

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உணவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உணவுக்காக 4 கிலோ மீட்டர் தூரம் காத்துக்கிடந்த மக்கள் – அதிர்ச்சி சம்பவம்
உணவுக்காக காத்துக்கிடந்த மக்கள்
ஜோகனஸ்பர்க்:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு 33 லட்சம் பேர்

பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

    இதற்கிடையில், வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பல்வேறு நாடுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும்

    இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    தென் ஆப்ரிக்காவிலும் வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர்.

    வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    கொரனோ அவலம்
    கொரனோ அவலம்

        Leave a Reply