கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு
Spread the love

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

தமிழகம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (15). அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் இவர், அதே

பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த நிதீஷ்குமார் (15), சமத்துவபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.

அங்கிருந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் 3 பேரும் வீதி ஓரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தனர்.

கிணற்றில் விழுந்த மாணவர்களை காப்பாற்ற சென்ற மூவர் உயிரிழப்பு

இவர்கள் பின்னாலே மற்றொரு வாகனத்தில் வந்த குப்புசாமி (58), அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும், இதனை கண்டதும் அதிர்ந்தனர். உடனே அந்த சிறுவர்களை காப்பற்றுவதற்கு கிணற்றுக்குள் குதித்தனர்.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டதில் இதில் அபினேஷ், நிதீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இருப்பினும் விக்னேஷை காப்பாற்ற இயலவில்லை.

அதுமட்டுமின்றி சிறுவர்களை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த குப்புசாமி, அசோக் குமார், சரவணன் ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த ராசிபுரம் பொலிஸார், தீயணைப்புதுறையினரின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.