கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

Spread the love

கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

கருங்கடல் உக்கிரேன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரசியா இராணுவத்தினருக்கு ஆதரவு சூட்டு தாக்குதலை நடத்திட கருங்கடல் பகுதியில் ஐந்து

ரசியா கப்பல்கள் தரித்துள்ளன ,திடீரென அதிகரிக்க பட்ட ரசியா கப்பல் எண்ணிக்கை உக்கிரேனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

ரசியாவின் ஆளும் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ,இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்கம் கைதுகள் என அறிவிக்க பட்ட பொழுதும் தமது இராணுவ அணுகுமுறையை மாற்றி கொள்ள ரசியா முனையவில்லை

நூற்றி ஆறாவது நாளை கடந்து தொடரும் உக்கிர மோதல்களில் பலத்த இழப்புக்களை எதிரி படைகளிற்கு தீரமுடன் வழங்கி வரும் உக்கிரேன் தொடந்து அதிரடி அதிவேக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

இங்கு இடம்பெற்று வரும் போரினால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம்

உள்ளனர் ,அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் ,எரிவாயு வரை விலை அதிகரிக்க பட்டுள்ளது

தமது மக்களை எவ்விதம் காப்பாற்றுவது என தெரியாது பல நாடுகள் திண்டாடி வருகின்றன ,இலங்கை பிற கீழே தேசிய நாடுகளின் நிலை மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்று வருகிறது

கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியின் கீழ் தமது நாட்டை ஒட்டி சென்ற நாடுகள்

தற்போது பணம் இன்றி தவித்து வருவதையும் அந்த மக்கள் உணவின்றி தவித்து

வருகின்ற கொடிய சூழலில் ஒன்றை இந்த போர் உருவாக்கி விட்டுள்ளது

அமைதியான வழியில் நாடுகள் மீள இணைந்து செல்லும் பொழுதே மக்கள் வாழ்வில் செழிப்பும் நாடுகளின் பொருளாதாரத்திலும் உயர்வுகளை காணமுடியும் ,ஆனால்

அதனை தவிர்த்து தமது இராணுவ நகர்வில் தீவிரம் காட்டி வரும் இரு நாடுகளின் செயல் பாடு ,நாடுகளுக்கு இடையில் யுத்தம் மூளும் நிலையை தோற்றுவிக்க போகிறது

எரி பொருட்கள் இல்லாத நிலையில் பல, நாடுகளில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளன ,அணைத்து நாட்டு

மக்களும் சுமுகமாக வாழவேண்டும் எனின் இந்த உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

கருங்கடல் பகுதியில் திடீரென குவிக்க பட்டுள்ள ரசியாவின் போர் கப்பல்களின் வரவு உக்கிரேன் மீது வரும் நாட்களில் பலமான தாக்குதலை ரசியா நடத்திட முனைய உள்ளதை கட்டியம் இடுகிறது .

கோடை காலத்திற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ள ரசியா
அதிபர் புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

    Leave a Reply