கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்

Spread the love

கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியா வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – பிரதமர் மோடி புகழாரம்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை

வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

அமெரிக்காவின் துணை அதிபராக உங்களை தேர்வு செய்தது ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வாகும். நீங்கள் உலகெங்கிலும் உள்ள பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறீர்கள்.

ஜோ பைடன் மற்றும் உங்கள் தலைமையின் கீழ் எங்கள் இருதரப்பு உறவுகள் புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறார்கள். இந்தியா வருகைக்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டபோது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்காக நான் அமெரிக்காவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான பங்காளிகள். அவர்கள் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது, அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகை வளாகத்தில் உரையாடினர்.

இதையும் படியுங்கள்…அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா – கமலா ஹாரிஸ் பெருமிதம்

Leave a Reply