கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை

Spread the love

கண்டியில் இருந்து நுவரெலியாவுக்கு நெடுச்சாலை

கண்டி நகரில் இருந்து நுவரெலியா வரையில் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பது பற்றிய சாத்தியக்கூறு ஆய்வுகள்

மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்திலேயே அமைச்சர் இவ்வாறு உரையாற்றினார். பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளை

போன்று பிரதேச சிறிய வீதிகளையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மாகும்புர நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு

செல்வதற்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

ன்மூலம் வெளியிடங்களில் இருந்து கொழும்பு செல்லும் பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை குறைப்பது இதன் நோக்கமாகும்.

இந்த வேலை திட்டத்திற்காக தனியார் துறையின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. கிராமிய வீதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவையும் சித்தரிக்கப்படவுள்ளன.

இந்த வருட இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 200 பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் காமினி லொகுகே மேலும் தெரிவித்தார்.

Leave a Reply