கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
Spread the love

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

காற்று மின்னல் தாக்குதல்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .