ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :

Spread the love

ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :

ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில்

தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வரும் ஞாயிறன்று இணையவழி

கருத்தாடல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட

காலநீடிப்பு, எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா ஐ.நா அமர்வுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இத்தீர்மானத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகம் தனது

நலன்களின் அடிப்படையில் தம்மை தயார்படுத்தி வரும் நிலையில், தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில் வரும் ஞாயிறு ஜனவரி 4ம் நாள், ஐரோப்பிய நேரம், 20h00 நியு யோர்க் நேரம் 2:00 pm இணையவழியூடாக ஏற்பாடு

செய்யப்பட்டுள்ள இக்கருத்தாடலில் ZOOM செயலிமூலமாக பங்கெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply