ஏன் பேச மறந்தாய் ..?

Spread the love

ஏன் பேச மறந்தாய் ..?

உன் கொலீசு காதுக்குள்ளே
ஊளையிட்டு மகிழுதடி
உன் கொண்டை மல்லிகை
ஊர் வாசம் வீசுதடி

தேர் ஓடும் வீதியிலே
தேவதை நீ நடக்கையிலே
தெறித்தோடும் காளை எல்லாம் -உன்
தோகை கூந்தல் தொடருமடி

பாலை வன புல்வெளியில்
பா வினங்கள் மேய்ந்திடுமோ
பாவை உந்தன் பூவிதழில்
படரா வண்டு உறங்கிடுமோ

நீர் தேடும் வேர்கள் எல்லாம்
நிழல் தர மறந்திடுமோ
நிலவே உன் பேரழகை
நிழல் தழுவ அஞ்சிடுமோ

தொலை தூர நடை பிடித்து
தொலையாம வீதி வந்து
கண் முன்னே நிற்பவரே
கதை பேசா நிற்பதென்ன

காளை உந்தன் நெஞ்சுக்குள்ளே
காதலாகி நான் இருக்க
என் அருகில் வந்து நின்று
ஏன் பேச நீ மறந்தாய் ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 25-01-2022

    Leave a Reply