எரிபொருள் பவுசர் ஒன்று லொறியுடன் மோதல்

Spread the love

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எரிபொருள் பவுசர் ஒன்று லொறியுடன் மோதியதில் கௌனிகம – தொடங்கொட பகுதி எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த எரிபொருள் பவுசர் 29.09 கிலோமீற்றர் தொடங்கொட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பவுசர் பயணி ஒருவரும் லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம தொடங்கொட பகுதியில் மாத்தறை நோக்கிய போக்குவரத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி

வரை சுமார் 8 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 29.09 கிலோமீற்றர் தூரத்தில் டயரை மாற்றுவதற்காக

நிறுத்தப்பட்டிருந்த போது, முத்துராஜவெலயிலிருந்து காலி நோக்கி 33,000 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற பவுசர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பவுசரில் சாரதி மற்றும் உதவியாளருக்கு மேலதிகமாக, சாரதியின் உறவினர் ஒருவர் உடனிருந்ததாகவும், குறித்த நபரும், லொறியின் சாரதி ஆகியோரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பவுசரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்தின் பொது லொறி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததால் இவ்வாறு வீதி மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் பவுசரின் முன்பகுதி மற்றும் லொறி மற்றும் அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Leave a Reply