என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ

Spread the love

என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ

அரசுக்கு மனோ வலியுறுத்தல்
என்னை திட்டி தீர்க்காமல், எனது யோசனையை, கொரொனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில், ஒன்றாக உறங்கி, வேலை

செய்து, பயணித்து வாழ்ந்த, ‘முதல் தொடர்பாளர்’களை (First Contact Persons) கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து

சோதனை செய்யுங்கள் என்று சொன்னேன். ‘முதல் தொடர்பாளர்’என்றால், இன்று கொழும்பில் சோதனையின் பின்னர்

கண்டுபிடிக்கப்பட்ட, 24 பேர் போன்றோர். நாட்டை முழுமையாக திறந்து, இயல்பு நிலைமை திரும்பி விட்டது எனக்காட்ட முன், ‘முதல்

தொடர்பாளர்’களை கண்டறிந்து சோதனை செய்து முடியுங்கள் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக

மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது,

இந்த ‘முதல் தொடர்பாளர்’ 40,000 பேரையும் பரிசோதியுங்கள் என்று ஊடக மாநாட்டில்நான் நான் கூறியதை பிடித்துக்கொண்டு, நான்

அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் போட “பொய் தகவல்” தந்ததாக, என் கருத்தை திரித்து கூறினார்கள்.

அமைச்சர்கள் எஸ்பி திசாநாயக்க, முன்னாள் எம்பி கம்மன்பில, இன்னும் பல அரசாங்க அமைச்சர்கள் உள்ளிட்டு, கடந்த

ஆட்சிகாலத்திலிருந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துகளை வெளியிட்டுவரும் டேன் பிரியசாத் என்ற சிங்களே

தேசிய இயக்கத்தை நடத்துவரும் நபர் உட்பட பலர் என்னைப்பற்றி கேவலமாக பேசினார்கள். இவர்களது இணையம் முழுக்க என்னை

, “வெளிநாட்டுக்காரன், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் திட்டிதீர்த்தார்கள்.

அரசு ஆதரவு தமிழ் முகநூல் போலி கணக்குகளும் என்னை விமர்சனம் செய்தன.

இதற்கிடையில் பௌத்த தகவல் நிலைய இயக்குனர் ஜிநானந்த தேரர் என்னை கைது செய்யும்படி பொலிஸ் மாதிபரிடம் புகாரும்

செய்தார். பொலிஸ் வீட்டுக்கு வரும்வரை பார்த்துகொண்டு இருந்தேன். ஆனால், என்னை தேடி பொலிஸ் வரவில்லை.

தமிழரோ, முஸ்லிமோ, அரசியல்வாதிகள், தேசிய பிரச்சினைகள் பற்றி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு வீசுவதை

பொறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இவர்களது எழுதப்படாத சட்டம். எல்லோரையும் போல் நான் “கப்சிப்” ஆள் இல்லை என இவர்களில் சிலருக்கு இன்னமும் தெரியவில்லை.

‘முதல் தொடர்பாளர்’ என்ற இப்படியானோர், சுமார் 40,000 பேர் இருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கட்சி தலைவர்

கூட்டத்தில் சொன்னதைதான் நான் சொன்னேன் என்று நேற்று விசேட ஊடக மாநாட்டில் நான் சிங்களத்தில் உரக்க சொன்னதும்,

இவர்கள் “கப்சிப்” ஆகி விட்டார்கள். பெரிய இடத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோ,

என்னவோ! போதாதற்கு அவர் பாடசாலை, பல்கலைக்கழக திறப்புகளுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.

இந்நிலையில், இன்று கொழும்பில் சோதனையின் போது ஒரே நாளில், ஒரே இடத்தில் 24 பேர் அகப்பட்டவுடன், என்னை திட்டிய

நபர்கள் இப்போது “இஞ்சி தின்ற குரங்குகளை” போல முழிசிக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள்.

இவற்றையிட்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம்

எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி, சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க

கூறுகிறேன். முதற்கட்டமாக, ‘முதல் தொடர்பாளர்’ களை தேடிப்பிடித்து, “சோதனை, சோதனை, சோதனை” செய்யுங்களப்பா…. அவ்வளவுதான்!

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூலில் எழுதியுள்ளார்.

Leave a Reply