எதிரி நீ புரிந்து விடு

எதிரி நீ புரிந்து விடு
Spread the love

எதிரி நீ புரிந்து விடு

விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை

வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை

செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்

எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்

எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023