ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் ஏற்பாடு

Spread the love

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் ஏற்பாடு

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட ரயில் பெட்டி ஒன்று பொதுவான ரயில் சேவையில் இணைக்கப்படும்.

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றும் மாணவ மாணவிகளுக்காக பிரதான

ரயில் பாதைகளில் விடேச ரயில் சேவை பாதுகாப்பு முறையுடன் முன்னெடுக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது செய்தி பிரிவிற்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இதற்கமைவாக பிரதான ரயில் பாதைகளில்

சேவையில் ஈடுபடும் ரயில்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்புடன் கூடிய சில ரயில் பெட்டிகளை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள கம்பஹா மற்றும் வெயாங்கொடைக்கிடையிலான ரயில் நிலையங்களில்

நிறுத்தப்படும். ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் நிறுத்தப்படும் இந்த ரயில்களில் பயணிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

விசேட ரயில் பெட்களுடன் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக ரயில் பாதுகாப்பு அதிகாரி

ஒருவரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் பரீட்சை திணைக்களத்தில் இது தொடர்பாக இறுதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply