ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

Spread the love

ஊரடங்கில் படப்பிடிப்பு நடத்துவதா? சாந்தினி கோபம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஆனாலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொறுப்பற்று சுற்றுவதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 2 வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில்

சாதாரண நாட்களைப்போல் பலர் சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கு போட்டும் பயன் இல்லை என்றும் பலர் கண்டித்து வருகிறார்கள்.

சினிமா படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சித்து

பிளஸ்-2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாந்தினி கண்டித்து உள்ளார்.

சாந்தினி

“ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் மறைமுகமாக எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர்

முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்

    Leave a Reply