உன்னை கொஞ்சம் மாற்று

உன்னை கொஞ்சம் மாற்று
Spread the love

உன்னை கொஞ்சம் மாற்று

உன்னோடு எனக்கென்ன கோபம்
உள்ளத்தால் போடாத சாபம்
மண்ணோடு உடல் போகும் காலம்
மனம் வாடி அழாதே நீ பாவம்

பூவை தேடுதே வண்டு – அந்த
பூவுக்கு இதனால் வாழ்வுண்டு
புயல் இல்லா மழையுண்டோ
புன்னகை வாடா வாழ்வுண்டோ

வாழ்வில் இதெல்லாம் சரிபாதி – இந்த
வாழ்வே உருளுது இதனுடன் மோதி
நீயும் நானும் அகராதி – இதை
நீ உணர்ந்தால் துன்பம் போகும் பாதி

உன்னை கொஞ்சம் மாற்று

கல்லாய் மனதை வைக்காதே
கண்ணீரில் தினம் குளிக்காதே
முள்ளால் சொல்லை குற்றதே
முன்னே வாழ்வை தடுக்காதே

உன்னை கொஞ்சம் மாற்று
உன்னை கொஞ்சம் மாற்று
உள்ளம் தருகிறேன்
உனக்காய் வாழ்கிறேன்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-05-2023