உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை-பொலிஸ்

Spread the love

உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை-பொலிஸ்

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் குறித்து உண்மைக்குப்புறமான தகவல்களை முன்னெடுப்பவர்களுக்கு

எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும்

தெரிவிக்கையில் , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் கொரோனா வைரஸ் நோயாளர்களின்

எண்ணிக்கை தொடர்பாக பல இடங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

உண்மைக்குப்புறம்பான தகவல்களினால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு போலியான

தகவல்களை பரப்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று; தொடர்பாக போலியான தகவல்களை

வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

      Leave a Reply