லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை -படங்கள் உள்ளே

Spread the love

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் – மக்களை படம் பிடித்த சிங்கள உளவுத்துறை

இன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இலங்கை இனவாத அரசின் அப்பாவி பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் ,வன்முறைகளை சுட்டி காட்டி,
குற்றங்களை உடனடியாக நிறுத்த கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தினை இன்று செவ்வாய்

கிழமை (08:03:2022) மதியம் 01 மணியளவில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைதியான முறையில் கோவிட் விதிகளை பின்பற்றி பிரித்தானிய சட்டவிதிகளுக்கமைய ஏற்பாடு செய்திருந்தனர் .இப்போராட்டத்தில்

.தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் இலங்கை அரசாங்கத்தை நோக்கி
இலங்கையில் இன்றும் எமது கண்களை போன்று பாதுகாப்பாகவும் ,மரியாதையோடும் நடத்த படவேண்டிய தமிழ் பெண்கள் பல சொல்லமுடியாத பல இன்னல்களையும்

,துன்பங்களையும் சிங்களஅரசாலும் ,சிங்கள இராணுவ படைகளாலும் அனுபவித்தவண்ணம் உள்ளர்கள் .அவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களையும் ,சித்திரைவதைகளும் உடனடியாக நிறுத்த வலியுறித்தி கோஷங்களாக

முழங்கினர்.இதில் கலந்து கொண்ட அனைவரும் வன்முறைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பையும் ,பெண்களுக்கான தங்கள் ஆதரவையும் ஆணித்தரமாக தெரிவித்தனர்.இதில் கோஷங்களாக

*தமிழ்ப் பெண்களைக் கொடுமைகளிலிருந்து காப்பாற்றுங்கள்
*தமிழ் பெண்களை மதித்தல்

*தமிழ் பெண்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துங்கள்
*எங்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் தேவை

என தங்கள் கோரிக்கைகளை மொழிந்தனர்

Leave a Reply