இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

Spread the love

இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .


தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .

இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.

மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .

இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .

இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .

எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .

அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .

இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply