இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

Spread the love

இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கை நட்டத்தில் எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும் என இலங்கை ஆளும் பிரதமர் ரணில் விக்கிரம சின்கா தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் ரணில் விக்கிரம சின்கா இவ்வாறு குறிப்பிட்டார்


இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக் கெகாள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறி கொடுத்து போனஸ் ஆசனம் மூலம் தெரிவான ரணில் இன்று இலங்கையில் பிரதமராக பதவி ஏற்றார்

இவரை ஆட்சியில் அமர்ந்த பின்னரும் நாட்டை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்ல முடியவில்லை வீர வசனம் பேசி வரும் ரணில் தற்போது மக்கள் நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண்பதில் படு தோல்வியை சந்தித்துள்ளார்

மக்களின் அத்தியாவசிய பொருள்கள் முதல் அனைத்தும் விலையும் அதிகரிக்க பட்ட நிலையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை தொடராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்சே குடும்பமே கரணம் என அனைத்து மக்கள் கூட்டாக தெரிவித்த வண்ணம் உள்ளனர்

தான் தோற்று போன ஜனாதிபதியாக பதவி விளக்க மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே அரியணையில் அமர்ந்துள்ளார்

இலங்கையில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு

மக்களின் போர் கீரோவாக வலம் வந்து இன்று அதே மக்கள் மத்தியில் ஸீரோவான கோத்தபாய ஆட்சியில் பிரதமராக விளங்கி வரும் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பான தலைவர் மக்களை வீடுகளில் உட்க்காரும் படி தெரிவித்துள்ள செயல்பாடு கொதிப்புக்கு நிலைக்கு எடுத்து சென்றுள்ளது

இவரது இந்த செய்தி மக்களை சீண்டும் தந்திரோபாய தாக்குதல் நகர்வு என அரசியல் நோக்கர்கள் தெரி க்கின்ற்னர்

அனுதாப அலையின் ஊடக மக்களை தனது வச படுத்தி தனது கட்சியை பலப் படுத்துவதில் அக்கறை கொண்டுள்ள ரணிலின் இந்த நகர்வு கோத்தாபாயாவையும் கடுப்பில் உறைய வைத்துள்ளதுள்ளது

    Leave a Reply