இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை

Spread the love

இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை

இரால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு கடன் சலுகை திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான கடன் சலுகை முறையொன்றை நடைமுறைப்படுத்தல்

2020 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக்தொன் அளவிலான எமது நாட்டு இறால் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெட்ரிக்தொன்களாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இறால்

வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இறால் அதிக வளர்ச்சி வேகத்துடன் கூடிய, நோயால் பீடிக்கப்படும் தன்மை குறைவான, சிறிய தடாகங்களில் வளர்க்கும் போது அதிக அடர்த்தியாக விடக்கூடியதாக இருப்பதால் அதிகளவிலான

அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. குறித்த இறால் வகை ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் வளர்ப்பை மேற்கொள்வதற்கு இயலும். ஆனாலும் அடர்த்தியுடன் வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும், ஆகவே அதிகளவில் தடாகத்தில் சேர்கின்ற

கனிமக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான சேற்றுத் தடாகம் அதிக அடர்த்தியுடன் கூடிய பொலிஎத்தலீன் பயன்படுத்தப்படும் நவீனப்படுத்தல் அவசியமாகும். மேலும், அதற்குச் சமாந்தரமாக, அதிகரிக்கும்

இறால் அறுவடைகளை ஏற்றுமதிக்கான களஞ்சியப்படுத்தல் வசதிகள், அதன் மூலம் பெறுமதிசேர் உற்பத்திகளை பதனிடுவதற்காக இறால் பதினிடல் நிலையத்தின் இயலளவை அதிகரிப்பதற்கும், அவற்றை புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும்

உள்ளது. அதற்கமைய, வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை

நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply