இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி
Spread the love

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே இக்கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.