இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்

Spread the love

இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா வேண்டுகோள்

இந்தியா, சீனா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவும், சீனாவும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்


ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ்
ஜெனிவா:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக்

எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


சீனா தரப்பில்உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோதலால் இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்

இது குறித்து அண்ட்டோனியாவின் துணைச்செய்தித்தொடர்பாளர் இர் ஹனிஹொ தெரிவித்ததாவது:-

இந்தியா-சீன எல்லையில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிக்கிறது. இரு நாடுகளும்

அதிகபட்ச கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் ஆறுதல் தரும் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்கிறோம்.

      Leave a Reply