இந்தியாவில் கொரோனா -புதிதாக 29,616 பேருக்கு தொற்று

Spread the love

இந்தியாவில் கொரோனா -புதிதாக 29,616 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 127, மகாராஷ்டிராவில் 51 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 290 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்தது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 29,616 பேருக்கு தொற்று

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 2 நாட்களாக பாதிப்பு 31,923, 31,382 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதுமான நேற்றைய பாதிப்பில் கேரளாவில் மட்டும் 61 சதவீதம் உள்ளது. அதாவது அங்கு புதிதாக 17,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர மகாராஷ்டிராவில் 3,286, தமிழ்நாட்டில் 1,733, மிசோரத்தில் 1,322, ஆந்திராவில் 1,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 127, மகாராஷ்டிராவில் 51 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 290 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,776 பேர் அடங்குவர்.

நோய் பாதிப்பில் இருந்து மேலும் 28,046 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக உயர்ந்தது.

தற்போது 3,01,442 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தை விட 1,280 அதிகம் ஆகும்.

கோப்புப்படம்

நாடு முழுவதும் நேற்று 71,04,051 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 84.89 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 15,92,421 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 56.16 கோடியாக உயர்ந்துள்ளது

Leave a Reply