இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு

Spread the love

இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,376 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் 1,813,688 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது. அதற்கான

காசோலை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம்

கையளிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

தேசிய நூலகம், ஆவணவாக்கல் சேவைகள் சபை 250,000 ரூபாவையும் இலங்கை செஸ் சம்மேளனம் 1,000,000 ரூபாவையும்

நிதியத்திற்காக ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர். அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

திரு ஹசன்த குருகே 100,000 ரூபாவையும் பஸ்னாகொட நீர்த்தேக்க திட்டம் 28,739.17 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர். தற்போது

இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,376,767,920.06 ரூபாவாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர்.

      Leave a Reply