இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

Spread the love

இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்

மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.

தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.

சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.

2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது

    Leave a Reply