ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

Spread the love

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; தலைவரும் அமைச்சருமான அமர்ர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 05.55 மணியளவில் நோர்வூட்

சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது. கடந்த 26 ஆம் திகதி காலமான அமைச்சர்

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமை அலுவலக சௌமிய பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான

வௌண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.கவின்

தொழில்பயிற்சி நிலையமான CFL இல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிக்கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துகுள் குறிப்பிட்ட

எண்ணிக்கையிலானோரேஅனுமதிக்கப்பட்டிருந்ததால் மைதானத்துக்கு வெளியில் தேயிலை மலைகளில் இருந்தும், சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடாக

தோட்டங்களில் இருந்தும் தமது தலைவரின் இறுதி பயணத்தை கண்ணுற்றனர். இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான்

விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று

மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலித்தினர். இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

உரையாற்றினார்.அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தினர்.

அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி சேவையாற்றிய தலைவர் எனவும் பாராட்டினர். சர்வமத தலைவர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்

அனுதாப செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாப செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன்

தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல்

பயணத்தை பாராட்டிய பிரதமர், இறுதி சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள

எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் பாராளுமன்ற

உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார். நுவரெலியா

மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஆறுமுகன் தொண்டமானின்
ஆறுமுகன் தொண்டமானின்

      Leave a Reply