அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

Spread the love

அடித்து பாயும் வெள்ளம் – 10 பேர் மரணம்

சீரற்ற காலநிலையின் காரணமாக , நாட்டின் எட்டு மாவட்டங்களில் 71 பிரதேச செயலக  பிரிவுகளில் 54 ஆயிரத்து 126 குடும்பங்களைச் சேர்ந்த ,இரண்டு இலட்சத்து 19ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் அடங்கலாக பத்துப் பேர்

உயிரிழந்திருப்பதுடன் ஒருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூவாயிரத்து 528 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 499 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

11 வீடுகள் முழுமையாகவும் 724 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நேற்று அரநாயக்க தெவனகல – அல்கம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்திட்டு இடிந்து வீழ்ந்ததை அடுத்து காணாமல்; போன நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த

இயற்கை அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். தந்தைக்கு 57 வயது, தாய்க்கு 56 வயது. பிள்ளைகளில் ஒருவருக்கு 23 வயது.

அதேவேளை, டயகம – நட்போன் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். டயகமவில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;. இந்த

வெள்ளப்பெருக்கிற்குக் காரணமான ஆற்றின் கரைகளை செப்பனிட்டு, அவற்றை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது,

நீரேந்துப் பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருவதால், மேல் கொத்மலை, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு நிலையம்

அறிவித்துள்ளது. மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தை அடுத்த பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் கேட்டுள்ளார்.

    Leave a Reply