யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம் – கார் சாரதி கைது
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கார் விபத்தில் சிக்கி, காயமடைந்த நிலையில் ,யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ஊந்துருளியில் பயணித்த கணவன் ,மனைவி மற்றும் அவர்களது எட்டுவயது மகன் மீது ,வேகமாக பயணித்த கார் ஒன்று ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,உந்துருளி மீது மோதி விபத்தில் சிக்கியது .
இதன் போதே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் படுகாயமடைந்தனர் .
இவ்வாறு படுகாயமடைந்த ஒரே குடும்பத்தை சேந்த மூவரில் ,எட்டுவயது சிறுவன் கால் முறிந்த நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காரால் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .