மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

Spread the love

மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

அமெரிக்கா Grand Bay பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் மூன்று வயது சகோதரனை 13 வயது அண்ணன் சுட்டு கொலை செய்துள்ளார்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்ணா தம்பி கள்ளன், பொலிஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர்

அப்பொழுது அண்ணன் துப்பாக்கியால் திருடனை சுட்ட போது அது நியமாகவே வெடித்து விட்டது


அண்ணன் பயன்படுத்திய விமான எதிர்ப்பு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு மூன்று வயது சகோதரனை கண்ணை துளைத்து அவரை கொலை செய்துள்ளது

சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பதின் மூன்று வயது அண்ணன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்

மூன்று வயது சகோதரன் சடலம் மீட்க பட்டு சடல மருத்துவ பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

விளையாடடு துப்பாக்கி போல் விமான எந்திர துப்பாக்கி சுட்டு விளையாட லோட் செய்து வைத்தது யார் அது எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

அமெரிக்காவில் துப்பாக்கிகள் அனுமதி பத்திரம் பெற்று வீடுகளில் வைத்திருக்க முடியும் ஆனால் அதனால் ஏற்படும் இவ்வாறான சுட்டு கொலை விபரீதங்கள் ஏற்பட்டால் துப்பாக்கி வைத்திருப்பவரே பொறுப்பாகும்

அவ்விதம் வயது அனுமதி பெற்று வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்க பட்டிருந்த துப்பாக்கி இன்று அதே வயது குறைந்த அண்ணனால் தம்பிக்கு எமனாக மாறியுள்ளது

அமெரிக்காவில் ஏற்படும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை தடுக்க துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரது அனுமதி இரத்து செய்ய பட வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,

அவ்வாறான வேளையில் வயது குறைந்த அண்ணனால் சிறிய தம்பி சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம் மக்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

துப்பாக்கி சூட்டில் சிக்கி மட்டும் அமெரிக்காவில் 700 பேர் பலியாகியுள்ளனர்
என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது

சிறுவர்களை சிறுவர்கள் சுட்டு கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

கடந்த மாதம் தாயை சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பதிவாகி இருந்தது ,இது அமெரிக்கா அரசு மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என வழங்கிய அனுமதியே, இந்த அப்பாவி உயிர்கள் பலியாக கரணம் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply