மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (21) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்த, மேல் கரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், குறித்த நபர் தனியாக மது அருந்தியுள்ளார்.

அவர் தங்கியிருந்த அறைக்கு பின்னால் உள்ள பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.