மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்

இதனை SHARE பண்ணுங்க

இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்


தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,


ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்


இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,


சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்


உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு


எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply