மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?

மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு, குறிப்பிட்ட வகை மாம்பழத்தை சாப்பிடுவது

பெண்களின் சருமத்தில் சுருக்கங்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்று கண்டறிந்துள்ளது.

மாம்பழத்தை ருசித்து சாப்பிடும் பலரும் அதன் தோல் பகுதியை ஒதுக்கிவிடுகிறார்கள்.

மாம்பழத்தின் தோல் பகுதியை வெட்டி நீக்கினால்தான் மாம்பழம் சாப்பிட்ட

திருப்தியே பலருக்கு உண்டாகும். ஆனால் பல ஆய்வுகள் மற்றும் சுகாதார நிபுணர்களின்

கருத்துபடி, மாம்பழத்தின் தோல் பகுதியில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கிறது. அவை பல நோய்களை தடுக்கக்கூடும் என்று

சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மாம்பழத்தின் தோல் பகுதி கடினமாக இருப்பதும், கூழ் பகுதியை விட சுவை குறைவாக இருப்பதும் அதனை குப்பையில் போடுவதற்கு

காரணமாக அமைந்திருக்கிறது. மாம்பழ தோலை சாப்பிட விரும்பாவிட்டால் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழ தோல் தரும் நன்மைகள்:

 • மாம்பழத்தின் தோலில் அதன் கூழ் பகுதியை விட ஆன்டி-ஆக்சிடெண்டுகள் மற்று
 • ம்
 • புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற பல வகையான
 • புற்றுநோய்களுக்கு எதிராக நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது. மாம்பழ தோலில் இருக்கும்
 • ட்ரைடர்பென்ஸ் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற தாவர சேர்மங்களும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன.
 • மாம்பழ தோலில், தாவரங்களில் காணப்படும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் எனும் சேர்மம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
 • இதய பிரச்சினைகளை தடுக்கவும் துணை புரியும். மேலும் மாம்பழத் தோலில் அதிக
 • நார்ச்சத்து இருப்பதால் இதய பிரச்சினைகளை தடுக்க உதவும். ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த உணவை

மாம்பழத்தின் தோலை சாப்பிடலாமா?

 • உட்கொண்டவர்களுக்கு இதய நோய் அபாயம் 40 சதவீதம் குறைவாக உள்ளது.
 • மாம்பழ தோல்களை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவைக்
 • கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவும். இதிலிருக்கும் லெப்டின் எனும் ஒரு வகை ஹார்மோன் ஆற்றல் நுகர்வையும், பசியையும் கட்டுப்படுத்தக்கூடியது
 • .
 • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஸ்கூல் ஆப் பார்மசி மேற்கொண்ட ஆய்வில், நம் டாக் மாய்' மற்றும்இர்வின்’ ஆகிய இரண்டு மாம்பழ வகை களின் தோல்கள்
 • உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை குறைப்பது தெரியவந்துள்ளது.
 • செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் மாம்பழ தோல் பயன்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பது செரிமான
 • ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மேலும் அவற்றில் பசியைக்
 • கட்டுப்படுத்த உதவும் சேர்மங்களும் உள்ளன.
 • மாம்பழ தோல்களில் வைட்டமின் ஏ மற்றும் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலில் நோய்
 • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.
 • மாம்பழ தோலில் இருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாகும் செயல் முறையை தாமதப்படுத்தும் என்று அறியப்படுகிறது. அமெரிக்க
 • ஆராய்ச்சியாளர்கள் குழு, குறிப்பிட்ட வகை மாம்பழத்தை சாப்பிடுவது
 • பெண்களின் சருமத்தில் சுருக்கங்களை எதிர்த்துப் போராடவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும் என்று கண்டறிந்துள்ளது.
 • மாம்பழத்தின் தோல் பகுதியை சாப்பிடும்போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினை
 • உண்டாகலாம்.
 • ஏனெனில் மாம்பழத் தோல்களில் யூருஷியோல் எனப்படும் ஒருவகை கலவை உள்ளது. இது ஒவ்வாமை எதிர்வினையை தூண்டும். இந்த
 • யூருஷியோலை உட்கொள்வதால் சுவாசப்பிரச்சினைகளையும் சிலர் எதிர்கொள்ளக்கூடும்.
 • அதனால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பவர்கள் மாம்பழ தோலை தவிர்ப்பது நல்லது.
 • மாம்பழ தோலை சாப்பிட விரும்புபவர்கள் அது இயற்கை விவசாய முறையில்
 • விளைவிக்கப்பட்டதா? என்பதை உறுதி செய்து கொள்வதும் நல்லது. ஏனெனில் தோல் பகுதியில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த பூச்சிக்கொல்லி
 • மருந்துகளும் படிந்திருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 • ஏனென்றால் பழ தோலில் உள்ள பூச்சிக்கொல்லிகள்,

 • புற்றுநோய்கள் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

  Leave a Reply